சுடச்சுட

    

    பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், புதன்கிழமை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அப்போது,  அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் சேர 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
    போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஸ்ரீதரன் உள்பட ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai