சுடச்சுட

  

  செய்யாறை அடுத்த பூதேரி புல்லவாக்கம் கிராமத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் கே.சம்பத், பி.மாதவன், ஏ.அன்பழகன், எல்.தனசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
  கொசு மூலம் பரவும் நோய்களில் மலேரியா முதன்மையான நோயாகும். அனாஃபிலிஸ் என்ற வகையைச் சேர்ந்த பெண் கொசு மூலம் மலேரியா காய்ச்சல் மனிதனுக்கு பரவுகிறது. குளிருடன் கூடிய காய்ச்சல், நடுக்கம், அதைத் தொடர்ந்து வியர்த்தல் போன்றவை நோயின் அறிகுறிகளாகும். இந்த நோய்க்கான மாத்திரைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன என்று சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
  மேலும், கொசுப் புழுக்களை அழிக்க நீர்நிலைகளில் கம்பூசியா வகை மீன்களை விட வேண்டும். முதிர் கொசுகளை புகை மருந்து அடித்து அழிக்க வேண்டும். அப்போது, வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறந்து வைக்க வேண்டும். நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரவில் படுக்கும்போது கொசுவலையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai