Enable Javscript for better performance
ஓய்வூதியர் சங்க பொதுக் குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் வந்தவாசி வட்டக் கிளை பொதுக் குழுக் கூட்டம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு சங்கத்தின் வந்தவாசி கிளைத் தலைவர் எ.கமாலுதீன் தலைமை வகித்தார். வட்டக்கிளைச் செயலர் எஸ்.நடேசன் வரவேற்றார். முன்னாள் மாநில பிரசாரச் செயலர் விஸ்வநாதன், கிளைப் பொருளாளர் ஈ.பலராமன், துணைத் தலைவர் பி.மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். கிளை நிர்வாகிகள் எப்.அல்லாபகஷ்கான், எ.ஹாஜகான், எ.ராமமூர்த்தி, ஆர்.எத்திராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    அரசு மருத்துவமனைகளில் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவச் சிகிச்சை பெற தனி வார்டு ஏற்படுத்த வேண்டும், வரும் 27-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற உள்ள சங்க மாநில மாநாட்டில் சங்கத்தினர் பெருமளவு கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai