Enable Javscript for better performance
சந்தன மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம்: வனத் துறை அலுவலக காவலர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சந்தன மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம்: வனத் துறை அலுவலக காவலர் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 04th May 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை  மாவட்ட வன அலுவலகத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் இரவுக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் எஸ்.சுதா உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெருவில் திருவண்ணாமலை தெற்கு வனக்கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளன. இவற்றில் 4 மரங்களை திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் வெட்டினர். இவற்றில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 3 மரங்களின் தடிமனான அடிப்பாகத்தை மட்டும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தன மரங்கள் வெட்டி, கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, வனச்சரகர் மனோகரன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இதற்கிடையே, திங்கள்கிழமை இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் எஸ்.சுதா உத்தரவிட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக இருந்ததால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai