சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் குழந்தைகளைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 04th May 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 சட்ட பிரிவின்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    இதற்கு செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்டவர்கள் w‌w‌w. ‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் கட்டணம் இல்லாமல் செங்கம் வட்டார வளமையம், செங்கம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையம் ஆகியவற்றில் வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்று, பிறப்பிடச் சான்று, வருமானச் சான்று ஆகிவைகளை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai