Enable Javscript for better performance
தம்பி மீது தாக்குதல்: அண்ணன் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே தம்பியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம், மன்சுராபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் (33). இவரது அண்ணன் சீனிவாசன் (35), சமையல் மாஸ்டராக வேலை செய்கிறார்.
    இவர்களுக்கு இடையே வெளியில் வாங்கிய கடனை அடைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்ததாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த சீனிவாசன் அவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  
    இதுகுறித்து, மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து சீனிவாசனை கைது செய்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai