Enable Javscript for better performance
நீதிமன்றங்களில் திருநங்கைகளுக்கு பணி: மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்றங்களில் திருநங்கைகளுக்கு பணி: மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி

    By DIN  |   Published on : 04th May 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் திருநங்கைகளுக்கு பணி வழங்கப்படும் என்று மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி கூறினார்.
    திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருநங்கைகளுக்கான சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி தலைமை வகித்தார். நீதிபதிகள் மலர்கொடி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்குத் தேவையான அனைத்து சலுகைகளையும் பெற்றுத் தர சட்டக்குழு சார்பில் உதவி செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கைகளுக்கு உரிய இட ஒதுக்கீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளின் உரிமையை பெற்றுத் தர நீதித் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். இதைத் தொடர்ந்து, திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
    இதில், ஏராளமான திருநங்கைககள், வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai