Enable Javscript for better performance
மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    போளூர் அருகே புதன்கிழமை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    படவேடு அருகே செண்பகதோப்பு கமண்டல நதியில் உரிய உரிமம் இன்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் சென்ற நிலையில், வருவாய்த் துறையினரை பார்த்ததும் டிராக்டரை விட்டுவிட்டு மணல் கடத்தல் கும்பல் தப்பியோடிவிட்டது.
    பின்னர், வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த டிராக்டர் திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
    இதையடுத்து, அந்த டிராக்டரை மணலுடன் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து, சந்தவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai