சுடச்சுட

    

    தெள்ளாறை அடுத்த டி.மாம்பட்டு கிராமத்தில் மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை இரவு தெள்ளாறில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தெள்ளாறு - தேசூர் சாலையில் தெள்ளாறை அடுத்துள்ள பெரியார் நகரில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது.
    இந்த மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சமரசம் செய்த அதிகாரிகள், அந்தக் கடையை ஒரு மாதத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
    இதையடுத்து, பெரியார் நகரில் உள்ள அந்த மதுக் கடையை தெள்ளாறை அடுத்த டி.மாம்பட்டு கிராமத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டி.மாம்பட்டு கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ்.முருகனிடம் புதன்கிழமை பிற்பகல் மனு அளித்தனர்.
    பின்னர், மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை இரவு வந்தவாசி - திண்டிவனம் சாலை, தெள்ளாறு அம்பேத்கர் சிலை அருகில் டி.மாம்பட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து அங்கு சென்ற வட்டாட்சியர் எஸ்.முருகன், காவல் துணைக் கண்காணிப்பாளர் பொற்செழியன் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai