சுடச்சுட

    

    மின் இணைப்பாளர்கள் நல மத்திய சங்கம் சார்பில் மே தின ஊர்வலம்

    By DIN  |   Published on : 04th May 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூரில் தமிழ்நாடு மின் இணைப்பாளர்கள் நல மத்திய சங்கம் சார்பில், மே தின ஊர்வலம், அன்ன தானம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
    கீழ்பென்னாத்தூர் திரெளபதியம்மன் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வத்தை சங்கத்தின் கெளரவத் தலைவர் ஆர்.மணி தலைமை வகித்து, தொடக்கி வைத்தார். அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை சாலை வழியாகச் சென்ற ஊர்வலம், மின்வாரிய அலுவலகம் எதிரே நிறைவடைந்தது.
    பின்னர், அங்கு சங்க பெயர்ப் பலகை திறக்கப்பட்டது.
    சங்கத் தலைவர் ஆர்.மணி தலைமை வகித்தார். செயலர் பி.ஆண்டி, பொருளாளர் வி.சீனிவாசன், துணைச் செயலர் பலராமன், இணைச் செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் என்.சீனிவாசன் வரவேற்றார்.
    சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆறுமுகம், சங்கக் கொடியேற்றி, பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து, சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலரும், கூடுதல் பொதுச் செயலருமான ஆர்.பன்னீர்செல்வம், அன்ன தானத்தை தொடக்கி வைத்தார்.
    விழாவில், சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், கணேசன், கோவிந்தன், கார்த்திகேயன், ரமேஷ், ராஜேஷ், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai