சுடச்சுட

  

  மே 10-இல் சித்ரா பெளர்ணமி விழா: முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

  By DIN  |   Published on : 04th May 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில்  சித்ரா பெளர்ணமி விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே உத்தரவிட்டார்.
  சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்ரா பெளர்ணமி விழா வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
  இந்தத் திருவிழாவுக்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்குத் தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளிப் பிரியா உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே பேசியதாவது:
  சித்ரா பெளர்ணமி விழா நெருங்கி வருகிறது. எனவே, பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக செய்து முடிக்க அனைத்துத் துறை அதிகாரிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
  கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனம் நோகாதபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் பணிபுரிய வேண்டும் என்றார்.
  கூட்டத்தில், அரசின் அனைத்துத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

  தாற்காலிக கடைகளுக்குத் தடை
  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வரும் 9, 10-ஆம் தேதிகளில் தாற்காலிகக் கடைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
  திருவண்ணாமலையில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் சித்ரா பெளர்ணமி விழாவுக்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாலையோரங்களில் தாற்காலிகக் கடைகள் அமைக்கக் கூடாது. மீறி வரும் 9, 10-ஆம் தேதிகளில் சாலையோர தாற்காலிகக் கடைகள் அமைத்தால், பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் எச்சரித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai