சுடச்சுட

    

    உலக தமிழ்க் கழக திருவண்ணாமலை கிளையின் இலக்கியக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கழகத்தின் சிறப்புத் தலைவர் பெ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் முன்னிலை வகித்தார். திருக்குறள் காமராசு வரவேற்றார். ஓரதிகாரத்து ஒரு குறள் என்ற தலைப்பில் ஆசிரியர் வே.கமலநாதன் பேசினார்.
    தொடர்ந்து, தொல்காப்பிய தொடர் வகுப்பில் புள்ளி மயங்கியல் குறித்து புலவர் பி.கோவிந்தராசனும், பாவேந்தர் பாரதிதாசனின் 127-ஆவது பிறந்த நாளையொட்டி பாரதிதாசன் குறித்து கல்லூரி விரிவுரையாளர் சு.பிரேம்குமாரும், இயற்கை உணவு முறை குறித்து ஆசிரியர் சங்கர் கணேஷும் பேசினர்.
    நிகழ்ச்சியில் திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிர்வாகி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன், ம.கோவிந்தசாமி, உலக தமிழ்க் கழக மாவட்ட அமைப்பாளர் சொ.செ.இளங்கோவன், வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன், புதிய பார்வை அமைப்பின் நிர்வாகி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai