சுடச்சுட

  

  சித்ரா பெளர்ணமி விழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடைபாதைக் கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
  திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பெளர்ணமி விழா வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  எனவே, கிரிவல பக்தர்களின் நலன் கருதி 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் நடைபாதைக் கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 9, 10, 11-ஆம் தேதிகளில் திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கிரிவலப் பாதையை ஒட்டியுள்ள ஆணாய்ப்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிப் பகுதிகளில் நடைபாதைக் கடைகள் வைக்கத் தடை விதிக்கப்படுகிறது.
  தடையை மீறி வைக்கப்படும் கடைகள் அப்புறப்படுத்தப்படும். மேலும், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், குற்ற வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மு.வடநேரே எச்சரித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai