சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட  மைய நூலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2ஏ தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு வரும் 6-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
    மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.
    அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2ஏ தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது. மாவட்ட மைய நூலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இந்த இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நூலக அலுவலர்
    இரா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai