சுடச்சுட

    

    செங்கத்தில் வியாழக்கிழமை மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி தொடங்கியது.
    செங்கம் ஜூலியஸ் ஹாக்கி கிளப் நடத்தும் 15-ஆம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இந்தப் போட்டி வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாள்கள் நடைபெறுகிறது.
    முதல் நாள் போட்டியில் திருச்சி, கோவை, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 18 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai