சுடச்சுட

  

  சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை புஷ்ப பல்லக்கு பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 05th May 2017 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேத்துப்பட்டில் புதன்கிழமை இரவு தூய லூர்து அன்னை புஷ்ப பல்லக்கு பவனி நடைபெற்றது.
  சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் ஆண்டு விழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேலூர் மறைமாவட்ட ஆயர் சௌந்தரராஜு தலைமையில் சிறப்பு திருப்பலியும், சிறப்பு நற்கருணை ஆசீரும், அலங்கரிக்கப்பட்ட தூய லூர்து அன்னை தேர்ப் பவனியும் நடைபெற்றன.
  தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை வேலூர் மறைமாவட்ட ஆயர் சௌந்தரராஜு பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் நெடுங்குணம் மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டார். இரவு 8 மணிக்கு தூய லூர்து அன்னை மின்சார விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் குழந்தை ஏசு, புனித அந்தோணியார், புனித சவேரியார், புனித சம்மனேசு ஆகியோருடன் போளூர் - வந்தவாசி நெடுஞ்சாலையில் பவனி வந்தனர். கிறிஸ்தவர்கள் மலர்களை தூவி அன்னையை வரவேற்று வழிபட்டனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டீபன், உதவி பங்கு தந்தையர்கள் மற்றும் பங்குபேரவையினர் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai