சுடச்சுட

  

  வந்தவாசி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு திமுக சார்பில் புதன்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
  வந்தவாசியை அடுத்த தெய்யாறு மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லன் (70). கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மேலும், பக்கத்தில் உள்ள மோகன்தாஸ் (38) என்பவரது கூரை வீட்டுக்கும் தீ பரவியது. இதில் 2 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், வீட்டு உபயோகப் பொருள்கள், நெல் மூட்டைகள் உள்ளிட்டவையும் எரிந்து சேதமடைந்தன.
  இந்நிலையில், திமுக சார்பில் 2 பேரின் குடும்பங்களுக்கும் வேட்டி, சேலை, அரிசி, பாத்திரம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
  திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், தெள்ளாறு கிழக்கு ஒன்றியச் செயலர் ப.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai