சுடச்சுட

    

    செங்கம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் கடந்த ஒரு வாரமாக பணம் இல்லாததால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
    செங்கம் பகுதியில் உள்ள துக்காப்பேட்டை, புதிய, பழைய பேருந்து நிலையம், போளூர் சாலை, இராஜ வீதி உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு, தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    இந்த ஏடிஎம் மையங்கள், கடந்த ஒரு வாரமாக போதிய அளவில் பணம் இல்லாமல் உள்ளன. இதன் காரணமாக செங்கத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் செங்கம் நகருக்கு வரும் கிராம மக்கள், வியாபாரிகள் பெரும் ஏமாற்றமடைகின்றனர்.
    இதனால் குறித்த நேரத்துக்கு விற்பனைக்குத் தேவையான பொருள்களை வியாபாரிகளால் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்கின்றனர். இதனால் அவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
    எனவே, சம்பந்தப்பட்ட அரசு, தனியார் வங்கி ஏடிஎம் மையங்களில் போதிய அளவில் பணம் நிரப்ப வங்கி அதிகாஹரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai