சுடச்சுட

    

    மாட்டுச் சாணத்தில் கோபார் வாயு, மண்புழு உரம் தயாரிக்கலாம்: கால்நடை ஆராய்ச்சி மையத் தலைவர் தகவல்

    By DIN  |   Published on : 05th May 2017 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாட்டுச் சாணத்தில் கோபார் வாயு, மண்புழு உரம் ஆகியவற்றைத் தயாரிக்கலாம் என்று கால்நடை ஆராய்ச்சி மையத் தலைவர் சா.தியோபிலஸ் ஆனந்தகுமார் தெரிவித்தார்.
    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
    இதில், பயிற்சி மையத் தலைவர் சா.தியோபிலஸ் ஆனந்த்குமார், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துப் பேசியதாவது:
    கறவை மாட்டுப் பண்ணையில் சேகரிக்கப்படும் சாணத்தைக் கொண்டு கோபார் வாயு, மண்புழு உரம் ஆகியவற்றைத் தயாரிக்கலாம். கோபார் வாயு மூலம் மதிப்பு கூட்டிய பால் பொருள்களைத் தயாரிக்கலாம்.
    மேலும், கொட்டகை அமைத்து ஆடு, கோழிகளை வளர்க்கலாம். கோழிகள், வாத்துகளை மீன் வளர்க்கும் தண்ணீர் நிலைமேல் வைத்து வளர்க்கலாம். பறவையின் எச்சங்கள் உயிர் உரமாக மாறி மீன்களுக்கான தீவணத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றார்.
    மேலும், மேற்கண்ட பண்ணைகளில் எடுக்கப்பட வேண்டிய தீவன மேலாண்மை, கொட்டகைக் கட்டுதல் ஆகியவை குறித்தும் அவர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். அசோலா தொட்டிகளுடன் ஆடு, மாடு, கோழி வளர்ப்பையும், பரண் மீது ஆடுகளையும், பரணுக்கு கீழே நாட்டுக் கோழிகளையும் வளர்ப்பது குறித்தும், மண் புழு உரம் தயாரிக்கும் விதம், நோய் பாதுகாப்பு முறை, வங்கிக் கடன் பெற திட்ட அறிக்கைகள் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும் என்று உதவிப் பேராசிரியர் துரைராஜன் பேசுகையில் குறிப்பிட்டார்.
    இதில், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai