சுடச்சுட

    

    மாநில அளவிலான எறிபந்துப் போட்டி திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு

    By DIN  |   Published on : 05th May 2017 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு மாநில எறிபந்து சங்கத்தின் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் விளையாட திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
    தமிழ்நாடு மாநில எறிபந்து சங்கம் சார்பில் 12-ஆவது மாநில அளவிலான சப் - ஜூனியர் எறிபந்து சாம்பியன் பட்டப் போட்டிகள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெறுகிறது. இதில் விளையாடும் திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு திருவண்ணாமலை, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளியில் நடைபெற்றது.
    இதில், தேர்வு செய்யப்பட்ட வீரர்களை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளித் தாளாளர் டி.அரவிந்த்குமார், பள்ளி துணைச் செயலர்கள் எஸ்.பிரபாகரன், பி.மழலைநாதன், மாவட்ட எறிபந்து சங்கச் செயலர் என்.சுரேஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர் எம்.மனோகரன், பயிற்சியாளர்கள் எஸ்.அண்ணாமலை, பி.தண்டபாணி, செல்வகுமார், எஸ்.விஜயராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் புதன்
    கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai