Enable Javscript for better performance
விவசாயி மீது தாக்குதல்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே விவசாயியைத் தாக்கியதாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
    தச்சம்பட்டை அடுத்த நரியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவி (41). இவரது வீட்டு வாசலில் அதே பகுதியைச் சேர்ந்த பவுன்குமார் (27), வெங்கடேசன் (31), செல்வம் (28) ஆகியோர் அடிக்கடி வந்து சீட்டு விளையாடி வந்தனராம். இதேபோல, புதன்கிழமையும் மூவரும் சேர்ந்து சீட்டு விளையாடிய நிலையில், இதை ரவி தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து ரவியை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், தச்சம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து வெங்கடேசன், செல்வம், பவுன்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து
    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai