சுடச்சுட

  

  வெப்பத்தைத் தணிக்க ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம்: மே 28 வரை நடைபெறுகிறது

  By DIN  |   Published on : 05th May 2017 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் வியாழக்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.
  அக்னி நட்சத்திரத்தின் வெப்பத்தைத்  தணிக்கும் வகையில், அக்னி நட்சத்திரம் முடியும் நாளான வரும் 28-ஆம் தேதி வரை தாராபிஷேகம் நடைபெறும் என்று கோயில் குருக்கள் தெரிவித்தனர்.
  திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாள் முதல் முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும்.
  அதன்படி, வியாழக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதையடுத்து, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர், கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில்களில் தாராபிஷேகம் நடைபெற்றது.
  சிவன் கோயில்களில் தாராபிஷேகம்: சிவன் கோயில்களின் மூலவர்களுக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிடுவர். அந்த பாத்திரத்துக்குள் பன்னீர், வெட்டிவேர் ஆகியவற்றை நிரப்பி வைப்பர். பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியாக சிவலிங்கம் மீது குளிர்ச்சியான பன்னீர் சொட்டு, சொட்டாக விழும்.
  சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அக்னி நட்சத்திரத்தில் வழக்கத்தை விட வெயிலின் அளவு அதிகமாக இருப்பதால், திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் உள்பட சிவன் கோயில்களில் உள்ள மூலவர்களை குளிர்விப்பதற்காக இந்த தாராபிஷேகம் பல நூறு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் தாராபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
  மே 28-ஆம் தேதி வரை நடைபெறும்: இந்த தாராபிஷேகம், அக்னி நட்சத்திரம் முடியும் நாளான வரும் 28-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  மற்ற கோயில்களில்...: இதேபோல, திருவண்ணாமலை ஸ்ரீதொண்டரீஸ்வரர் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை ஸ்ரீஆதி அருணாசலேஸ்வரர் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடங்கியுள்ளது.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai