Enable Javscript for better performance
வெம்பாக்கம் வட்டாரத்தில் 39 பள்ளி செல்லா குழந்தைகள்- Dinamani

சுடச்சுட

    

    வெம்பாக்கம் வட்டாரத்தில் 39 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் அறிவுரையின் படியும், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பெ.சுப்பிரமணியன் வழிகாட்டுதலின் படியும், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
    அதன்படி, வெம்பாக்கம் வட்டாரத்துக்கு உள்பட்ட 64 பஞ்சாயத்துக்களில் 6 - 14 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வெம்பாக்கம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கு.தேன்மொழி மேற்பார்வையில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவழகன், ஜோதி ஆகியோர் கண்காணிப்பில், ஆசிரியர் பயிற்றுநர்கள் எம்.உமா, என்.பிர்லா, ஏ.ஆர்த்தி, டி.இராமஜெயம், வி.கோவிந்தராஜ், எஸ்.கார்த்திகேயன், எம்.அண்ணாசாமி, பி.ரமேஷ், வ.உதயசங்கர், மோ.சண்முகம், என்.ரேவதி மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.
    அப்போது, வெம்பாக்கம் வட்டாரத்தில் 39 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் அவர்களது வயத்துக்கேற்ற வகுப்புகளில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai