சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கீழ்பென்னாத்தூர், காந்தி தெருவில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் வாசவி ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது.
    இதையொட்டி, மூலவர், உற்சவருக்கு வாசனை திரவியங்கள், பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில், ஆரிய வைசிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், மாவிளக்குகளைப் படைத்து அம்மனை வழிபட்டனர்.
    விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு குங்குமம், விபூதி, நெய்வேத்திய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு அம்மன் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai