சுடச்சுட

  

  கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணி: மே 10 முதல் 17 வரை நேர்காணல்

  By DIN  |   Published on : 06th May 2017 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 10 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் 10-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  தினமும் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் நேர்காணல் நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பாணை தனித்தனியே தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில், தங்களது அசல் சான்றுகளுடன் விண்ணப்பதாரர்கள் நேரில் கலந்து கொள்ள வேண்டும்.
  அழைப்பாணை கிடைக்காதவர்கள் தங்களுக்கான அழைப்பாணைகளை w‌w‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தில் இருந்து சனிக்கிழமை (மே 6) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், வரும் 8, 9-ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களிலும் அழைப்பாணைகளை பெற்றுக் கொள்ளலாம். அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai