சுடச்சுட

    

    குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலை அருகே கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை வட்டம், மங்கலத்தை அடுத்துள்ளது வேடந்தவாடி கிராமம். இந்தக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
    எனவே, வேடந்தவாடி கிராமத்துக்கு முறையாக குடிநீர் வழங்கக் கோரி, துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் அண்மையில் மனு அளித்தனர். எனினும், குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்,
    திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தகவலறிந்த மங்கலம் போலீஸார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று போலீஸார் உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai