சுடச்சுட

  

  போளூரை அடுத்த கொளத்தூர் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில்களில் தாராபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியது.
  கொளத்தூர் ஊராட்சியில் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. ஆண்றுதோறும் அக்னி நட்சத்திரம் தொடங்கும்போது, இந்தக் கோயில்களில் உள்ள மூலவருக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் தாராபிஷேகம் நடத்தப்படுகிறது.
  அதன்படி, மூலவருக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிடுவர். அந்த பாத்திரத்துக்குள் பன்னீர், வெட்டிவேர், பச்சைகற்பூரம், லவங்கபூ, குங்குமபூ ஆகியவற்றை நிரப்பி வைப்பர். பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியாக சிவலிங்கம் மீது குளிர்ச்சியான பன்னீர் சொட்டு, சொட்டாக விழுமாறு செய்து சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க வைக்கின்றனர்.
  வரும் 28-ஆம் தேதி வரை தாராபிஷேகம் நடைபெறுகிறது. தொடக்க நாளான வியாழக்கிழமை ஏராளமான பக்தர்கள்
  கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai