சுடச்சுட

  

  தமிழகத்தில் திருவண்ணாமலை, தேனி ஆகிய மாவட்டங்களில் இந்தியமுறை மருத்துவமனைகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய மருத்துவமுறை மற்றும் ஹோமியோபதி ஆணையர் மோகன் பியாரே கூறினார்.
  மத்திய ஆயுஷ் அமைச்சகம், தமிழக அரசின் இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து நடத்தும் "தேசிய ஆரோக்யா - 2017' என்ற தேசிய மருத்துவக் கண்காட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 4 நாள்கள் இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
  தொடக்க நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
  இந்திய முறை மருத்துவத்தில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனையில்தான் உள்நோயாளிகள் பிரிவும், வெளிநோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.
  இந்திய முறை மருத்துவம் குறைந்த செலவில் நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் ஆகிய மருத்துவ முறைகளுக்கென்று 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன என்றார் அவர்.
  மோகன் பியாரே பேசியபோது, "தமிழகத்தில் தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்திய முறை மருத்துவமனைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
  2017 - 2018-ஆம் ஆண்டில் மேலும் 2 இந்திய முறை மருத்துவமனைகள் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது' என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai