சுடச்சுட

    

    பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 06th May 2017 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே உள்ள பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை நகர 7-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு நகர நிர்வாகி அலமேலு தலைமை வகித்தார். நிர்வாகி தெய்வானை வரவேற்றார். மாநிலச் செயலர் எஸ்.ராணி, மாவட்டச் செயலர் கே.வாசுகி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாநாட்டை விளக்கிப் பேசினார்.
    மாநாட்டில், திருவண்ணாமலை நகரில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். நகரில் போதிய சாலை வசதி,  தெரு விளக்கு வசதிகளை செய்து தர வேண்டும்.
    பல்வேறு தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீர், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே உள்ள பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    புதிய நிர்வாகிகள் தேர்வு: இதைத் தொடர்ந்து, மாதர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நகரத் தலைவராக செட்டிக்குளமேடு எஸ்.செல்வி, செயலராக எஸ்.செல்வி, பொருளாளராக என்.ஷகிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    முன்னதாக, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் பெரிய கோபுரம் எதிரில் இருந்து மாதர் சங்க பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai