சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியில் போலி மருத்துவர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி பகுதியில் போலி மருத்துவர்கள் பலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக நலப் பணிகள் இணை இயக்குநர் கிரிஜாவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கிரிஜா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தானிப்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
  சோதனையின்போது, தானிப்பாடி, பிள்ளையார் கோயில் தெரு கிருஷ்ணவேணி (60), தானிப்பாடி குமரேசன் (40), டி.வேளூர் ரோடு சவுந்தரராஜன் (51), சையத் சர்வேஸ் (63) ஆகியோர் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் முறையான மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் மருத்துவக் குழுவினர் பிடித்து தானிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  போலீஸார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். இவர்களது மருத்துவமனைகளில் இருந்து ஏராளமான அலோபதி மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai