Enable Javscript for better performance
இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில், 7 நாள் இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டுக்கு அருகில் உள்ள ஸ்ரீபாரத் வித்யாலயா பள்ளியில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு தென்னாங்கூர் ஸ்ரீஞானானந்தகிரி பீடாதிபதி ஸ்ரீநிரஞ்சனானந்தகிரி சுவாமிகள் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்துப் பேசினார்.
    விழாவில் பேரவை அமைப்பாளர் அ.வே.முனுசாமி, மருத்துவர் எஸ்.குமார், புலவர் நடேசன், பேரவை செயற்குழு உறுப்பினர்கள் சு.காளத்தி, அ.பெ.வெங்கடேசன், செ.வேங்கமுத்து, சாமி.கபிலன், பூங்காவனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இந்த பயிற்சி வகுப்பில் சைவ திருமுறைகள், திருக்கோயில் வழிபாடு, திருக்குறள், இயற்கை வைத்தியம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai