சுடச்சுட

  

  கள்ளச் சாராயத்தை ஒழிக்கக் கோரி  தெள்ளாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்னா

  By DIN  |   Published on : 07th May 2017 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அந்தக் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தை சனிக்கிழமை மாலை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தெள்ளாறு காலனியில் பல ஆண்டுகளாகவே கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, வந்தவாசி பகுதியில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த 19 மதுக் கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன.
  இதன் காரணமாக தெள்ளாறு காலனியில் கள்ளச் சாராய விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் தெள்ளாறு காலனிக்கு கள்ளச் சாராயம் குடிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகமானதால், அந்தக் காலனி பகுதி பெண்கள், மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனராம்.
  இதுகுறித்து தெள்ளாறு காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், தெள்ளாறு காலனியில் கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றியத் தலைவர் சிவக்குமார் தலைமையில் தெள்ளாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், காவல் நிலையம் முன் அமர்ந்து தர்னாவிலும் ஈடுபட்டனர்.
  பின்னர், தெள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) முரளிதரன் தலைமையிலான போலீஸார், கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai