சுடச்சுட

  

  கிரிவலப் பாதை கழிப்பிடங்களை பயன்படுத்தக் கட்டணம் கிடையாது

  By DIN  |   Published on : 07th May 2017 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பிடங்களை பக்தர்கள் பயன்படுத்த கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.
  திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி விழா வரும் புதன்கிழமை
  (மே 10) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையையொட்டி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆணாய்ப்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஆகிய கிராம ஊராட்சிகள் உள்ளன.
  இந்தப் பகுதிகளில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சார்பில், 10 சுகாதார வளாகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுகாதார வளாகங்களையும், அதில் உள்ள கழிப்பிடங்களையும் கிரிவல பக்தர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai