Enable Javscript for better performance
சம்புவராயநல்லூர் விருப்பாட்சீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    சம்புவராயநல்லூர் விருப்பாட்சீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா: அமைச்சர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 07th May 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த சம்புவராயநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅகிலேண்டீஸ்வரி சமேத விருப்பாட்சீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
    விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தேரில் ஸ்ரீஅகிலேண்டீஸ்வரி சமேத விருப்பாட்சீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து, முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுந்துச் சென்றனர்.
    விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டார். உடன், அதிமுக அம்மா அணி முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், நிர்வாகிகள் அகிலேஷ்பாபு, குமரன், சதீஷ், சேட்டு உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    ஏற்பாடுகளை கோயில் நிர்வாக ஆய்வாளர் இரா.நடராஜன், நிர்வாக அலுவலர் பெரியமருதுபாண்டியன், விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai