Enable Javscript for better performance
சித்ரா பெளர்ணமி: பக்தர்களுக்கு இலவசமாகவிபூதி பொட்டலம் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சித்ரா பெளர்ணமி: பக்தர்களுக்கு இலவசமாக விபூதி பொட்டலம் வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 07th May 2017 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்ரா பெளர்ணமி விழாவுக்காக திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவசமாக விபூதி பொட்டலம் வழங்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
    திருவண்ணாமலை நகர பாஜக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகரத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
    கூட்டத்தில், திருவண்ணாமலையில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் சித்ரா பெளர்ணமி விழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் செய்து தர வேண்டும்.
    சித்ரா பெளர்ணமியன்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறநிலையத் துறை சார்பில்
    இலவசமாக விபூதி பொட்டலங்கள் வழங்க வேண்டும் என்பன
    உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இதில், மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.கருணாகரன் உள்பட
    நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai