சுடச்சுட

  

  தச்சு, புத்தகம் கட்டும் பயிற்றாசிரியர் பணியிடங்கள்: மே 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 07th May 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தச்சு, புத்தகம் கட்டும் பயிற்றாசிரியர், வாத்தியக் குழு ஆசிரியர் பணியிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள வாத்தியக்குழு ஆசிரியர், புத்தகம் கட்டும் பயிற்றாசிரியர் நிலை - 1, நிலை - 2, தச்சுப் பயிற்றாசிரியர் நிலை - 1, நிலை - 2 ஆகிய பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்ப சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற, பயின்று வரும் பொதுப்பிரிவு, ஆதிதிராவிடர், அருந்ததியர் (முன்னுரிமை உடையவர்) பிரிவினருக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  எனவே, திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற, பயின்று வரும் பொதுப்பிரிவு, ஆதிதிராவிடர், அருந்ததியர் (முன்னுரிமை உடையவர்) பிரிவினர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நெ.650ஏ, இடுக்குப் பிள்ளையார் கோயில் 3-ஆவது குறுக்குத் தெரு, வேங்கிக்கால், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் அணுகி உரிய விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
  மேலும், w‌w‌w.‌s‌o​c‌i​a‌l‌d‌e‌f‌e‌n​c‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆணையர், சமூக பாதுகாப்புத் துறை, நெ.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை 600 010 என்ற முகவரிக்கு வரும் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
  மேலும், விவரங்களுக்கு 04175 - 233030, 044 - 26426421, 044 - 26427022 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai