Enable Javscript for better performance
தடுப்பணை கட்டுமானப் பணி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு ஒன்றியம், புளியரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டுமானப்  பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
    புளியரம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் புளியரம்பாக்கம் ஏரிக்கரையில் இருந்து காழியூர் ஏரிக்கு செல்லும் காழியூரான் கால்வாயின் குறுக்கே சுமார் ரூ.92 ஆயிரம் மதிப்பில் சிறிய அளவிலான தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே ஆய்வு செய்தார். பின்னர், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து சுமார் 2 மணி நேரம் கருங்கற்களை எடுத்துக் கொடுத்து உடன் வேலை செய்தார்.
    இதே போன்று, செய்யாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் மற்றும் அவருடன் வந்திருந்த அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் பலரும் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
    இவர்களுடன் பஞ்சாயத்து உதவி இயக்குநர் அரிகரன், செய்யாறு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆணையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காந்திமதி, பொறியாளர்கள் மாதவன், வெங்கடாஜலபதி மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்கள் பலரும் தடுப்பணை கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai