சுடச்சுட

    

    "புதுச்சேரியை தூய்மை மாநிலமாக மாற்ற அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை'

    By DIN  |   Published on : 07th May 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியை தூய்மை மாநிலமாக மாற்ற அரசு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று, அந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வருத்தம் தெரிவித்தார்.
    புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர், இங்குள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், கந்தாஸ்ரமம், ஸ்ரீரமணாஸ்ரமத்தில் தரிசனம் செய்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: இந்தியாவிலேயே சிறந்த தூய்மை மாநிலமாக புதுச்சேரியை மாற்ற விரும்பினேன்.
    இதற்காக, மாநிலத்தின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், தன்னார்வலர்களுக்குக் கடிதம் அனுப்பினேன். எனது அழைப்பை ஏற்று தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதிகாரிகளில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தைத் தூய்மையான மாநிலமாக மாற்ற அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புத் தராமல் ஒதுங்கி விட்டது வருத்தம் அளிக்கிறது என்றார்.
    பேட்டியின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
    இதையடுத்து, காரிலேயே 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை கிரண் பேடி வலம் வந்து அஷ்டலிங்க சன்னதிகளை தரிசனம் செய்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai