Enable Javscript for better performance
பெண் தற்கொலை: கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே பெண்ணை
    தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர் (42). இவரது மனைவி குமாரி (30). இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சங்கர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானாராம். தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.
    இதேபோல, கடந்த வியாழக்கிழமை சங்கர் மது அருந்திவிட்டு வந்து குமாரியிடம் தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த குமாரி, அன்றைய தினமே விஷத்தழையை தின்று மயங்கி விழுந்தார். இதைக் கவனித்த பொதுமக்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், மருத்துவமனையில் குமாரி உயிரிழந்தார்.
    இதுகுறித்து, அவரது தாய் காசியம்மாள் வெறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai