Enable Javscript for better performance
மதுக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் 2-ஆவது முறையாகப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் 2-ஆவது முறையாகப் போராட்டம்

    By DIN  |   Published on : 07th May 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, 2-ஆவது முறையாக பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை - பெரும்பாக்கம் சாலையில் உள்ளது செ.அகரம் கிராமம். இங்குள்ள டாஸ்மாக் மதுக் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
    இருப்பினும், மதுக் கடை தொடர்ந்து அங்கு இயங்கி வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை 2-ஆவது முறையாக 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர். இதையடுத்து,  பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai