சுடச்சுட

    

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஆதார் எண்ணை இணைக்க அழைப்பு

    By DIN  |   Published on : 07th May 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை, ஆரணி வட்டங்களில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை  வைத்துள்ளவர்களுக்கு ஆதார் எண் இணைக்கும்
    பணி நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமானோர் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையிலான அடையாள அட்டை வைத்துள்ளனர். இந்த அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி திருவண்ணாமலை, ஆரணி வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
    முதல்கட்டமாக திருவண்ணாமலை வட்டத்தில் பவித்திரம், மல்லவாடி, இனாம்காரியந்தல், வேங்கிக்கால், நார்த்தாம்பூண்டி, ஆரணி வட்டத்தில் பையூர், எஸ்.வி நகரம், ராட்டிணமங்கலம், வேலப்பாடி, நெசல் உள்ளிட்ட கிராமங்களில் இந்த பணி நடைபெறுகிறது.
    எனவே, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களுக்குச் சென்று தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai