Enable Javscript for better performance
வந்தவாசியில் சூதாட்டத்தை ஒழிக்க பாஜக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி நகரில் நடைபெற்று வரும் காட்டன் சூதாட்டத்தை ஒழிக்க காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
    வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வந்தவாசி நகர பாஜக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு நகரத் தலைவர் வி.குருலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.நேரு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ண கணேசன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் டி.செல்வேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.ஜி.துரை நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் எம்.சீனுவாசன் வரவேற்றார்.
    மாவட்ட பொதுச் செயலர் ஆர்.மோகனம் சிறப்புரை ஆற்றினார். நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.
    வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்கு தனியார் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்கும் பழைய பேருந்து நிலையத்துக்கும் இடையில் சிற்றுந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai