சுடச்சுட

    

    வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
    வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (28). இவர், பிளம்பராக வேலை செய்து வந்தார். முருகன் வெள்ளிக்கிழமை மாலை வல்லம் கூட்டுச்சாலைக்கு சென்று பைக்கை பழுதுபார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
    வந்தவாசி - சேத்பட் சாலை, மழையூர் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai