சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 968 தனியார் பள்ளி வாகனங்களின் தகுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
  ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக, மாணவ, மாணவிகளை அழைத்துவர தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.
  அதன்படி, இந்த ஆண்டுக்கான பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியைத் தொடக்கி வைத்தார். பின்னர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகரசு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சேர்ந்து பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
  வரும் 31-ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் இயங்கும் 968 பள்ளிகளின் வாகனங்களையும் ஆய்வு செய்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, வாகனங்களில் அவசர கால வழி உள்ளதா, தீயணைப்புக் கருவி உள்ளதா, வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளனவா, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
  இதேபோல, செய்யாறு, ஆரணி பகுதிகளில் வரும் திங்கள்கிழமை ஆய்வு நடைபெறுகிறது.
  குறைபாடுகள் காணப்படும் பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai