சுடச்சுட

    

    அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி கட்டுமான மின் தொழிலாளர்கள் பேரணி

    By DIN  |   Published on : 08th May 2017 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கக் கோரி, கட்டுமான மின் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணியாகச் சென்றனர்.
    திருவண்ணாமலை மாவட்ட கட்டுமான மின் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில், மே தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவர் பி.ராஜசேகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் கெளரவத் தலைவர் டி.பிரபாகரன், செயலர் பி.ரமேஷ், பொருளாளர் பி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    சிறப்பு அழைப்பாளர்கள் ஜி.சரவணன், என்.பாண்டுரங்கன், எம்.அசோக்குமார், வி.ராஜ்குமார், ஆர்.காந்தி, பி.தனஞ்செயன், புகழேந்தி, வீரபத்திரன், எம்.தர்மராஜ், ஆர்.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். இதில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் நலத் திட்ட உதவிகளை அரசு உடனே வழங்க வேண்டும். சங்க அலுவலகத்துக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  விழாவில் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.சங்கர், துணைச் செயலர்கள் எம்.உமாபதி, வி.வெங்கடேசன், எம்.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    முன்னதாக, திருவண்ணாமலை பெரியார் சிலை எதிரே இருந்து பேரணி புறப்பட்டது. சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஏ.அருள்
    குமரன் பேரணியைத் தொடக்கி வைத்தார். அண்ணா சிலை, காந்தி சிலை, தேரடி தெரு வழியாகச் சென்ற பேரணி கனகராய முதலி தெருவில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில், 300-க்கும் மேற்பட்ட கட்டுமான மின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai