சுடச்சுட

    

    அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு

    By DIN  |   Published on : 08th May 2017 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் சித்திரை வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு, திங்கள்கிழமை (மே 8) இரவு நடைபெறுகிறது.
    பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான உற்சவம் ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கியது.
    இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் ஸ்ரீ அருணாசலேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இரவில் கோயில் மூன்றாம் பிரகாரத்தை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
    கோயில் தல விருட்சமான மகிழ மரம் அருகே வரும்போது உற்சவருக்கு குழந்தை பொம்மை பூ கொட்டும் நிகழ்வும் நடைபெறுகிறது.
    மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு: 10 நாள் விழாவின் முக்கிய நிகழ்வான மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு, திங்கள்கிழமை (மே 8) நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 8 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி, இரவு ஸ்ரீ கோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    இரவு 10 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வுடன் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai