சுடச்சுட

    

    வந்தவாசி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    வந்தவாசி கெஜலட்சுமி நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஜீவபிரசாத் (16). வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி கோடை விடுமுறையில் இருந்த ஜீவபிரசாத், வந்தவாசி புறவழிச் சாலை பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர், அவர்களுடன் சேர்ந்து அருகிலிருந்த கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்று நீரில் மூழ்கி ஜீவபிரசாத் உயிரிழந்தார்.
    தகவலறிந்து வந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர், கிணற்றிலிருந்து ஜீவபிரசாத்தின் உடலை மீட்டனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai