கோடைகால முகாம் தொடக்கம்
By DIN | Published on : 08th May 2017 07:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால சிறப்பு முகாம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவுக்கு இந்தியன் வங்கி மேலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். நூலக ஆர்வலர் வாசுதேவன் வாழ்க்கை முன்னேற்றத்தை பற்றியும், பாவலர் சு.வேலாயுதம் நல்ல தமிழில் எழுதுவோம் என்ற தலைப்பிலும், பேராசிரியர் சங்கர் தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம் என்ற தலைப்பிலும், நல்லாசிரியர் மூர்த்தி இசையோடு வாழ்வோம் என்ற தலைப்பிலும் பேசினர்.
இதில், சிறப்பாகப் பதில் அளித்த மாணவர்களுக்கு எழுதுகோல்கள் பரிசளிக்கப்பட்டன. முகாமில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும். முகாமில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மைய நூலகர் சாயிராம் தெரிவித்தார்.
முகாமில் நூலகர்கள் திருச்செந்தில், காமராஜ், கிருஷ்ணன், ஹேமா, மைய நூலகப் பணியாளர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.