சுடச்சுட

  

  ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
  ஆரணி வட்டம், இரும்பேடு கிராமத்தில் உள்ள நன்செய் நிலமானது, ஆரணி புதுக்காமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானதாகும்.
  இந்த நிலம், மணி என்பவர் பெயரில் பட்டா மாறி இருந்தது. கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அறிந்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஜி.கோதண்டராமன், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனியிடம் புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுத்து, மணி பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்து, மீண்டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
  இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சசிகலா, ஆக்கிரமித்து செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றுபோது, ஏற்கெனவே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த மணி அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகத் தெரிகிறது. எனவே, மணி மீது ஆரணி கிராமிய போலீஸில் செயல் அலுலவர் சசிகலா புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai