சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
  திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி விழா மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
  35 இடங்களில் கார் நிறுத்துமிடங்கள்: இதுதவிர, நகரைச் சுற்றி 35 இடங்களில் கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. கோயில் வளாகம், 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதை பகுதிகளில் 18 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புப் பணியில் 2,900 காவலர்கள் ஈடுபடுகின்றனர்.
  அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு: விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள தாற்காலிகப் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அப்போது, முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
  இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.  வி.பன்னீர்செல்வம், காவல் உதவிக் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் இரா.ரவி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai